தம்மிக்க பெரேரா பாராளுமன்றம் நுழைகிறார்?

இலங்கையின் பணக்காரர் என கூறப்படும், வர்த்தகர் தம்மிக்க பெரேரா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரை உள் கொண்டுவரவே பசில் ராஜபக்ஷ வெளியேறுவதாக கூறப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினராக சத்தியபிரமாணம் செய்த பின்னர் வர்த்தக துறை சம்மந்தமான அமைச்சு பதவி அவருக்கு வழங்கப்படவுள்ளது. முதலீட்டு துறையுடன் சம்மந்தப்பட்ட அமைச்சு பதவியாகவே அவருக்கு வழங்கப்படவுள்ளதாக நம்பப்படுகிறது.

தம்மிக்க பெரேரா சில வருடங்களுக்கு முன்னர் தன்னிடம் ஆட்சி பொறுப்பு கிடைத்தால் இலங்கையினை முன்னேற்றி காட்டுவேன் எனவும், பணக்கார நாடாக மாற்றி காட்டுவேன் எனவும் ஒரு நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.

தம்மிக்க பெரேரா பாராளுமன்றம் நுழைகிறார்?
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version