முக கவசம் அவசியமில்லை

நாளை(10.06) முதல் இலங்கையில் முகக்கவசம் கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதர அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இதனை அறிவித்துள்ளார். கடந்த மாதம் ஏற்கனவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு பின்னர் மீளப் பெறப்பட்டிருந்தது.

பொது போக்குவரத்துகளில் முகக்கவசம் பாவிக்கப்படவேண்டும். சுவாச நோயுள்ளவர்கள் முகக்கவசத்தை தொடர்ந்தும் பாவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள அதேவேளை, விரும்பியவர்கள் முகக்கவசம் அணிய முடியுமெனவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

PCR பரிசோதனை , அல்லது அன்டிஜன் பரிசோதனை செய்வது கட்டாயமில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின் பிரகாரம் முகக்கவசம் அணியும் நடைமுறை பின்பற்றப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக கவசம் அவசியமில்லை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version