மன்னார் வாள் வெட்டு கொலையின் தொடர்ச்சி, வைத்தியசாலையில் கத்தி குத்து

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் இன்று திங்கட்கிழமை(13.06) அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் சிகிச்சை பெற்று வந்தவர் படுகாயமடைந்து பலத்த காயத்துடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர், கடந்த வெள்ளிக்கிளமை நடைபெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் காயமைடைந்து சிகிச்சை பெற்று வரும் மன்னார் நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்தவராவார்.

இந்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை விடுதியில் தங்கியிருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அண்மையில் நொச்சிக்குளம் பகுதியில் இரு சகோதரர்கள் வாள்வெட்டு தாக்குதலில் பலியாகிய நிலையில் நள்ளிரவில் நொச்சிகுளம் பகுதியை சேர்ந்த ஒருவர் கத்திகுத்துக்கு இலக்காகியுள்ளமை மன்னார் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாள் வெட்டு சம்பவம் தொடர்புடைய சந்தேக நபர்கள் காடுகளில் தலைமறைவாகியுள்ள நிலையில், திட்டமிட்ட கொலையென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த கத்தி குத்தின் மூலம் இந்த சம்பம் மேலும் தொடருமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி

மன்னார் வாள் வெட்டு கொலையின் தொடர்ச்சி, வைத்தியசாலையில் கத்தி குத்து
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version