சுற்றுலா அதிகார சபை பதிவு நிறுவனங்களுக்கு பியர் அனுமதி

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்ட சகல நிறுவனங்களுக்கும் பியர் மற்றும் வைன் ஆகிய மென் மதுபான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று அமைச்சரவை கூட்டத்தில் இந்த அனுமதி வழங்கப்பட்டதனை தொடர்ந்து வர்த்தமானி மூலமாக இந்த அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.

இந்த அனுமதியின் மூலமாக இலங்கைக்கான சுற்றுலா பயணிகளின் வரத்து இலங்கைக்கு அதிகரிக்குமென சுற்றுலா துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சுற்றுலா பயணிகளின் வரவு அதிகரிக்கும் பட்சத்தில் சுற்றுலா துறையினருக்கும், நாட்டுக்கும் வருமானம் அதிகரிக்குமெனவும் அவர் மேலும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சுற்றுலா அதிகார சபை பதிவு நிறுவனங்களுக்கு பியர் அனுமதி
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version