பொலநறுவை, வெலிக்கந்தை பகுதியிலுள்ள கந்தகாடு புனர்வாழ்வு சிறையில் இருந்த கைதிகள் 600 பேர் இன்று காலை 8 மணிக்கு சிறைச்சாலையின் பிரதான வாயிலினை உடைத்து தப்பித்து சென்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
தப்பித்தவர்களை கைது செய்ய இராணுவம் மற்றும் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை சிறைச்சாலையில் ஒருவர் இறந்தனை தொடர்ந்து ஏற்பட்ட பதற்ற நிலை காலை வரை தொடர்ந்த நிலையியேயே இந்த சமப்வம் இடம்பெற்றுளளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.