யாழில் பாஸ்போர்ட் அலுவலகம் விரைவில்.

யாழ்ப்பாணத்தில் மிக விரைவில் கடவுச்சீட்டு வழங்கும் நிலையம் திறக்கப்படவுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை முதல் வவுனியா, கண்டி, மாத்தறை ஆகிய மாவாட்டங்களில் ஒரு நாள் கடவுச் சீட்டு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படுவதாக அவர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் மேலும் ஐந்து மாவட்டங்களில் ஒரு நாள் கடவுச் சீட்டு வழங்கும் நிலையங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விரைவாக அந்த நிலையங்களை ஆரம்பிக்க வேண்டிய நிலை காணப்படுவதாகவும், விலை மனு கோரல் முறைக்கு சென்றால் குறைந்தது 6 மாதங்களாவது எடுக்கும் எனவும், தனது சொந்த பணத்தில் யாழ்ப்பாணத்தின் நிலையத்தை உடனடியாக ஆரம்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

இதவேளை, குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும் முறையினால் அதன் சேமிப்பு தொழில் நுட்பம் அடிக்கடி செயலலிழப்பதாகவும் அதனை தற்காலிகமகா சீர் செய்வதற்கு தம்மிக்க பெரேரா தனது சொந்த பணத்தில் ஒன்பது இலட்சம் ரூபாவினை வழங்குவதாககும் மேலும் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ரீதியில் குடிவரவு, குடியகல்வு திணைக்களங்களை அமைப்பதற்கு கொடையாளிகளிடம் கோரிக்கை விடுப்பதாகவும், அவ்வாறான முறையிலேயே வேகமாக நிலையங்களை அமைக்க முடியுமெனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

யாழில் பாஸ்போர்ட் அலுவலகம் விரைவில்.
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version