குருநாகல், யக்கஹாபிட்டிய எரிபொருள் நிலையத்தில் வைத்து இளைஞர் ஒருவரை இராணுவ லெப்டினன் கேணல் தர அதிகாரி ஒருவர் காலால் உதைத்து தாக்கியமை மற்றும் இன்னுமொரு நபரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரட்ன தெரிவித்துள்ளார்.
இராணுவம் மற்றும் பொலிசாரது கடமைகளுக்கு இடையூறு வழங்கியதாகவும், தகாத வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டதாகவும் எரிபொருளில் நிலைய உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் தெரிவித்துள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வேண்டுமென்ற அந்த எரிபொருள் நிலையத்தில் குழப்பத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் போதே இந்த சம்பவம் நடைபெற்றதாக அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளதாகவும் மேலும் இராணுவ பேச்சாளர் கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடபிரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.