ஷேன் வோனுக்கு மன நோய் – மனோ MP

முன்னாள் அவுஸ்திரேலியா வீரரான உலக புகழ பெற்ற சுழற் பந்துவீச்சாளர் ஷேன் வோர்னுக்கு மன நோய் ஒன்று உள்ளது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“ஷேன்வார்னேக்கு இளம் மொட்டுகள் மலர்வதை ஜீரணிக்க முடியாத ஒரு நோய். வர்ணனை அறையில் அமர்ந்து அநாகரீகமாக, நெறியற்று விஷம் கக்குகிறார். முரளியின் மீதான ஷேன் வோர்னின் தாக்குதல்களை நாம் மறக்கலை. இப்போ நடராஜன். என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ட்விட் தொடர்பாக நாம் நேரடியாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுடன் பேசிய போது ” நடராஜன் வேண்டுமென்றே நோ போல் போடும் ஒருத்தர். முதல் பந்தை நோ போலாக போடுகிறார் என வர்ணனையாளராக இருந்து கொண்டு சொல்வது பாரிய குற்றச்சாட்டு. நடராஜன் ஏழை குடும்பத்திலிருந்து வந்த தமிழன். அவர் வளர்ந்து வரவேண்டும். வளர்பவர்களை இவ்வாறு செய்யக்க்கூடாது.

பல அவுஸ்திரேலியா வீரர்கள் பல மோசமான செயற்பாடுகளை செய்துள்ளனர். அவர்களை பற்றி பேசாமல் நடராஜன் போன்ற வளர்ந்து வரும் வீரர்களை இவ்வாறு வசை பாடுகிறார். மோசமான மனிதர்” என தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், பாடசாலை காலத்தில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய ஒருவர். தற்போது கூட மைதானங்களுக்கு போனால் பந்துவீசுவது, துடுப்பாடுவதென களத்தில் இறங்கிவிடுவார்.

ஷேன் வோனுக்கு மன நோய் - மனோ MP
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version