இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியில் தமிழ் வீரர்.

இந்த வார இறுதியில் இங்கிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இலங்கை கிரிக்கெட் அணியில் கனிஸ்ரன் குணரட்ணம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

கொழும்பு புனித அந்தோனியார் கல்லூரியின் உப தலைவராக சிறப்பாக செயற்பட்டிருந்த கனிஸ்ரன், அண்மையில் மாகாணங்களுக்கு இடையிலான இலங்கை 19 வயதிற்குட்பட்டோருக்கான சுற்றுப்போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்தி இறுதிப் போட்டியின் நாயகனாக தெரிவு செய்யப்பட்ட நிலையில் இலங்கை அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கனிஸ்ரன் குணரட்ணம், யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர்களான Dr.ஹன்றி றோச் குணரட்ணம் மற்றும் Dr. சினோதயா குணரட்ணம் ஆகியோரின் புதல்வன் ஆவார்.

ஏற்கனவே, யாழ்ப்பாணக் கல்லூரியுடன் தொடர்புகளை கொண்டிருந்த ரஸல் ஆர்ணல்ட் 1997 – 2007 ஆண்டு வரையான காலப் பகுதியில் இலங்கை அணியின் சகலதுறை வீரராக பெருமை சேர்ந்திருந்த நிலையில், தற்போது கனிஸ்ரன் தன்னுடைய பயணத்தை ஆரம்பித்தூள்ளமை பெருமைக்குரிய விடயமாகுமென யாழ்ப்பாணக் கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியில் தமிழ் வீரர்.
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version