முட்டை விலை சடுதியாக அதிகரித்ததை அடுத்து அரசு முட்டைக்கான நிர்ணய விலையினை தீர்மானித்திருந்தது. அதற்கமைய இன்று முதல் வெள்ளை முட்டை 43 ரூபாவாகவும், சிவப்பு முட்டை 45 ரூபாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முட்டைக்கான உச்சபச்ச விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளமை சிறந்த விடயம் அல்ல என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர்
ஆர் . எம் .சரத் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இந்த கட்டுப்பாட்டு விலையினை தொடர்ந்து முட்டை விநியோகிப்பாளர் சங்கம், முட்டை விநியோகத்தினை நிறுத்துவதாகவும் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.
இன்று வர்த்தக அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.