LPL – யாழ், கண்டி அணிகளுக்கிடையிலான போட்டி ஆரம்பம்

விமல் – பல்லேகல மைதானத்திலிருந்து

ஜப்னா கிங்ஸ் மற்றும் கண்டி பல்கொன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பித்துள்ளது. மழை காரணமாக மைதானம் மூடப்பட்டமையினால் நாணய சுழற்ச்சி 10 நிமிடங்கள் தாமதமாகவே ஆரம்பித்தது.

கண்டி நகரம் முழுவதும் கடும் மழை பெய்த போதும் மைதானத்திலிருந்து 1 கிலோமீட்டர் தூரம் வரை மழை பெய்த போதும், மைதானத்தில் மழை பெய்யவில்லை.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கண்டி பல்கொன்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்த்துள்ளது.

அணி விபரம்

கடந்த கண்டி அணியின் போட்டியில் காயமடைந்து நான்கு பற்கள் உடைந்த சாமிக்க கருணாரட்ன மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். கண்டி அணி வெறி மாற்றங்கள் எதனையும் செய்யவில்லை.

ஜப்னா கிங்ஸ் மாற்றங்களின்றி விளையாடுகிறது.

ஜப்னா கிங்ஸ்

திசர பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, ரஹ்மனுள்ள குர்பாஸ், தனஞ்சய டி சில்வா, சொஹைப் மலிக், ஜேம்ஸ் புல்லர், டுனித் வெல்லாளகே, மஹீஸ் தீக்ஷண, விஜயகாந்த் விஜாஸ்காந், ஷமான் கான்

கண்டி பல்கொன்ஸ்

வனிந்து ஹஸரங்க, பத்தும் நிஸ்ஸங்க, அன்றே பிளட்சர், கமிண்டு மென்டிஸ், அஷேன் பண்டாரா, பாபியன் அலன், சாமிக்க கருணாரட்டன, கார்லோஸ் ப்ராத்வைட், இசுரு உதான, சகூர் கான், அஷேன் டானியல்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version