தம்புள்ள – காலி அணி மோதல் ஆரம்பம்

தம்புள்ள ஓரா மற்றும் காலி க்ளாடியேற்றஸ் அணிகளுக்கிடையிலான போட்டி ஆரம்பமாகியுள்ளது. தம்புள்ள அணி மிக பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் இந்தப் போட்டி ஆரம்பமாகியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள காலி அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.

தம்புள்ள அணி அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் வாய்ப்புகள் குறைவு என்ற நிலையில் இந்தப் போட்டி ஆர்மபிக்கவுள்ளது. காலி தோல்வியடைந்தாலும் அடுத்த சுற்று வாய்ப்புக காணப்படுகின்றது எனும் நிலையில் காலி அணி வெற்றியோடு அடுத்த சுற்றுக்கு செல்ல முயற்சிக்கும்.

இந்தப் போட்டியில் வெற்றி பெறுமணி, கொழும்பு அணியோடு எலிமினேட்டர் போட்டியில் விளையாடவுள்ளது.

தம்புள்ள அணியின் தலைவர் தஸூன் சாணக்கவின் கையில் ஏற்பட்ட முறிவு காரணமாக இன்றைய போட்டியில் விளையாடவில்லை. சிகண்டர் ரஷா அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தம்புள்ள - காலி அணி மோதல் ஆரம்பம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version