கொலையில் முடிந்த குடும்ப தகராறு!

பொரளை, சர்ப்பன்டைன் அடுக்குமாடி குடியிருப்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கணவன், தன மனைவியை கூரிய ஆயுதத்தால் குத்தி நேற்று (13.01) இரவு கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 32 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தன் மனைவியை தாக்கிவிட்டு அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தப்பிக்க முயன்ற கணவன், பலத்த காயங்களுக்குளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் தொடர்பான நீதவான் மரண விசாரணை இன்று (14) நடைபெறவுள்ளதுடன் பொரளை பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலையில் முடிந்த குடும்ப தகராறு!
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version