பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்திலிருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாவலப்பிட்டி அனுருத்த குமார தேசிய பாடசாலையில் 10ம் ஆண்டில் கல்வி கற்கும் நாவலப்பிட்டி உடஹிந்தன்ன பிரதேசத்தில் வசித்து வந்த ஹசித தேவிந்திர என்ற 15 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று (15.01) மதியம் நாவலப்பிட்டி நகரில் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த ஹசித, தனது வீட்டிற்கு அருகில் பேருந்தில் இருந்து இறங்க முற்பட்ட போது தவறி விழுந்துள்ளார். அப்போது, பிரதான வீதிக்கு அருகாமையில் இருந்த மண்மேட்டில் அவரது தலை மோதி பலத்த காயமடைந்ததால் மரணித்துள்ளார் என குருந்துவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பேருந்தை நிறுத்தும் முன், முன்பக்க கதவால் கீழே இறங்க முயன்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றதா என்பது தொடர்பில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேகத்தின் பேரில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.