வவுனியா நகரசபை மைதானம் நடைப்பயிற்சிகளுக்காக திறக்கப்பட்டுள்ளதாக நகரசபை தலைவர் கெளதமன் தெரிவுத்துள்ளார்.
சமூக இடவெளியினை பின்பற்றி நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகளை செய்ய முடியுமென வி தமிழுக்கு தெரிவித்த அவர் குழு நிலை பயிற்சிகளிலும், போட்டிகளிலும் தற்போது ஈடுபடமுடியாது எனவும், அது பற்றி பின்னர் அறிவிக்கப்படுமெனவும் தெரிவித்தார்.