வட்ஸ்அப், இன்ஸ்ராகிராம் மற்றும் முகநூல் செயலிகள் தற்போது இயங்காதுள்ளமை தொடர்பாக வட்ஸ்அப் மற்றும் முகநூல் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
சிலரது வட்ஸ்அப், இன்ஸ்ராகிராம் மற்றும் முகநூல் கணக்குகள் தற்போது செயற்படுத்த முடியாதுள்ளமை தொடர்பில் கவனத்தில் எடுக்கப்பட்டு அதனை முடிந்தவரை விரைவாக வழமைக்கு கொண்டுவருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பான தகவல்கள் விரைவில் அனுப்பி வைக்கப்படுமெனவும், குறித்த இடையூறுக்கு வருந்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.