ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு வேட்பு மனுவில் குளறுபடி – ராம் குற்றச்சாட்டு

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகரசபை வேட்பு மனுவில் பெயரிடப்பட்டிருந்த பல பெயர்கள் அழிக்கப்பட்டு, புதிய பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், ஐக்கிய தேசிய கட்சியின் தற்போதைய மாநகரசபை உறுப்பினர்களின் பெயர்களே இவ்வாறு சேர்க்கப்பட்டுள்ளதாதகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு வடக்கு அமைப்பாளர் C.Y.P ராம் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் அந்த கட்சியின் மேயர் வேட்பாளர் முஜிபுர் ரஹ்மான் அதனை மறுத்துள்ளார் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

டிப்பெக்ஸ் மூலம் பெயர்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், இவை தொடர்பில் கட்சி தலைவர் நடவடிக்கை எடுப்பார் என தான் நம்புவதாவும் ராம் மேலும் கூறியுள்ளார். அத்தோடு தற்போதைய ஆகிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக தேர்தலில் போட்டியிடுவதனை எதிர்ப்பதாகவும் மேலும் கூறியுள்ளார்.

கட்சியின் பொது செயலாளரின் அனுமதியின் அடிப்படையில் கொழும்பு மாநகரசபை தேர்தலில் அனைவரும் போட்டியிட முடியுமெனவும், எவ்வாறான பிரச்சினைகளோ, பிரிவுகளோ இந்த விடயம் தொடர்பில் இல்லையெனவும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு வேட்பு மனுவில் குளறுபடி - ராம் குற்றச்சாட்டு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version