ஜீவன் தொண்டமான், இந்திய வெளிவிவகார செயலாளர் சந்திப்பின் விடயங்கள்

தோட்ட உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேற்று இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஸ் வர்தன் ஷ்ரிங்லாவினை சந்தித்திருந்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பில் பெருந்தோட்ட பகுதிகளில் அமைக்கப்படவிருக்கும் இந்திய வீட்டுத்திட்டம் தொடர்பாகவும், கொட்டகலை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவிருக்கும் பல்கலைக்கழகம் தொடர்பாகவும், அப் பல்கலைக்கழகத்திற்கு இந்திய அரசின் ஒத்துழைப்பு மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாகவும் விரிவாக இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளருக்கு விளக்கமளித்ததாக ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அத்தோடு பெருந்தோட்ட பகுதிகளின் பல்வேறு அபிவிருத்திகள் தொடர்பாகவும், இந்திய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மலையக பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு அபிவிருத்தி பணிகள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடியதாக ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜீவன் தொண்டமான், இந்திய வெளிவிவகார செயலாளர் சந்திப்பின் விடயங்கள்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version