ஐ.தே.க வேட்பாளர்களுக்கு இ.தொ.கா ஆதரவு

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கு போட்டியிடவுள்ள ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முழுமையான ஆதரவை வழங்கவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நேற்று (07.02.2023) கொட்டாஞ்சேனை மேற்கு, அம்மன் கோவிலில் ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாநகரசபை வேட்பாளர்களுக்காக சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து,
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கு போட்டியிடவுள்ள ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களுக்கான அறிமுக நிகழ்வு ஆமர்வீதியிலுள்ள பிரைட்டன் ஹோட்டலில் இடம்பெற்றது. இதன் போதே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முழுமையான ஆதரவை வழங்கவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் ரவி கருணாநாயக்க மற்றும்
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஆர்.யோகராஜன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் செயளாலர் சமன் ரத்னபிரிய, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் திருகேஸ் செல்லசாமி, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் விஷ்ணுகாந்த் ஜெயராஜ், மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாநகரசபை வேட்பாளர் ஆனந்தகுமார் உட்பட மேலும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

ஐ.தே.க வேட்பாளர்களுக்கு இ.தொ.கா ஆதரவு
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version