கினிகத்ஹேன கந்த சுரிதுகமவில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இரண்டு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன .
உயிரிழந்த பெண்கள் 30 மற்றும் 50 வயதுடைய கினிகத்தேனை பிரதேசத்தை வசிப்பிடமாகக்கொண்ட தாயும் மகளும் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீதவான் பரிசோதனையின் பின்னர் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த மரணத்திற்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படாத நிலையில், கினிகத்தேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.