யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 8 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தோற்கடிக்கப்பட்ட நிலையில் அதன் முதல்வர் மாற்றபப்ட்டார்.
அதனை தொடர்ந்து புதிய முதல்வர் இ. ஆனோல்ட்டினால் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முற்பகல் 10:30 மணியளவில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.
ஐந்து உறுப்பினர்கள் கலந்து கொள்ளாத நிலையில் இன்றைய வாக்களிப்பில் 40 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக 24 வாக்குகளும், ஆதரவாக 16 வாக்குகளும் வழங்கப்பட்டன.
ஆனோல்ட் முதல்வராக நியமிக்கப்பட்டமை சட்டவிரோதமானது என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதேவேளை தேர்தல் நடைபெற்றால் இந்த சபை இன்னமும் ஒரு மாதத்துக்கும் குறைவான காலத்துக்கே வலுவானதாக காணப்படும்.