முதலிடம் இந்தியா அணிக்கு கிடைப்பது சந்தேகமான நிலையில்!

இந்தியா, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் இந்தியா, இந்தூரில் நடைபெற்ற போட்டியில் இந்தியா அணியை அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. தொடரில் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் காணப்பட்ட இந்தியா அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் டெஸ்ட் போட்டிகளில் முதலிடத்தை பெற்று மூன்றுவித கிரிக்கெட் போட்டிகளிலும் முதலிடத்தை பெறும் வாய்ப்புகள் காணப்பட்ட நிலையில் அந்த வாய்ப்பு தவறியுள்ளது. அடுத்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே முதலிடத்தை பெற முடியும்.

ICC உலக சம்பியன் லீக் தொடரில் இந்தியா அணி முதலிடத்தை பெறும் வாய்ப்புகளையும் இழந்துள்ளது. அவுஸ்திரேலியா அணியின் முதலிடம் உறுதியாகியுள்ள நிலையில் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

முழுக்கு முழுக்க சுழற் பந்துவீச்சாளர்களுக்கான மைதானத்தை இந்தியா தயார் செய்த நிலையில் நேதன் லயோனின் சுழலுக்குள் இந்தியா அணி சுழன்று போனது. நிறைவடைந்த மூன்று போட்டிகளுமே சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக மாறிய நிலையில் போட்டிகள் விறு விறுப்பு அற்றுப் போனது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்தியா அணி 109 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. விராத் கோலி 22 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. மத்திய கன்மான் 5 விக்கெட்களையும், நேதன் லயோன் 3 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 197 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் 60 ஓட்டங்களை உஷ்மான் காவாஜா பெற்றுக் கொண்டார். மார்னஸ் லபுஷேன் 31 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் ரவீந்தர் ஜடேஜா 4 விக்கெட்களையும், அஷ்வின், உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

இரண்டாவது இன்னிங்சில் நேதன் லயோன் கைப்பற்றிய 8 விக்கெட்கள் மூலமாக 163 ஓட்டங்களுக்குள் இந்தியா அணி உருண்டது. புஜாரா 59 ஓட்டங்களையும், 26 ஓட்டங்களை ஷ்ரேயாஸ் ஐயரும் பெற்றனர்.

76 ஓட்டங்கள் என்ற வெற்றியிலைக்கை 1 விக்கெட்டினை இழந்து அவுஸ்திரேலியா அணி பெற்றுக் கொண்டது. இதில் ரவிஸ் ஹெட் 49 ஓட்டங்களையும், மார்னஸ் லபுஷேன் 28 ஒட்டங்களையும் பெற்றனர்.

போட்டியின் நாயகனாக நேதன் லயோன் தெரிவு செய்யப்பட்டார். அணியின் தலைவர் பட் கம்மின்ஸ் அவரின் தாயாரின் சுகயீனம் காரணமாக நாடு திரும்பிய நிலையில் அணியின் தலைவராக பதவியேற்ற ஸ்டீவ் ஸ்மித் வெற்றியினை இந்தியா மண்ணில் பெற்றுக் கொடுத்துள்ளமை சிறப்பானதாக அமைந்துள்ளது. அத்தோடு ஸ்மித்துக்கு தலைவர் பதவியினை ஏன் வழங்கக்கூடாது என்ற கேள்வியும் எழும் வாய்ப்புகள் உள்ளன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version