லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நான்காவது கட்டமான இந்த வருட தொடருக்கான திகதியினை இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. இந்த வருடம் ஜூலை 31 ஆம் திகதி LPL ஆரம்பித்து ஓகஸ்ட் 22 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் LPL தொடரை நடத்துவதன் மூலம் வெளிநாட்டு வீரர்களை இணைத்துக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகமாக காணப்படுவதாகவும், இலங்கை அணியின் போட்டிகளுக்கு ஏற்றால் போல அவற்றை சீர் செய்யும் வாய்ப்புகள் காணப்படுவதாகவும் LPL இயக்குனர் சமந்த டொடன்வெல கூறியுள்ளார்.
LPL தொடரின் வழமையான காலப்பகுதிக்கு இந்த வருட தொடர் மீண்டும் திரும்புகிறது. ஐந்து அணிகள் பங்குபற்றும் இந்த தொடரில் ஒரு அணியில் 6 வெளிநாட்டு வீரர்கள் அடங்கலாக 20 வீரர்கள் இணைக்கப்பட்டு வருகின்றனர்.