நம்ம நாட்டு தமிழக நடிகை லொஸ்லியா

கடந்த முறைக்கு முதல் முறை நடை பெற்ற பிக்பொஸ்-03 நிகழ்ச்சியில் பங்குபற்றி உலகளவில் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாகியிருந்தார் லொஸ்லியா. தற்போது இயக்குநர் சபரியின் இயக்கத்தில் இலங்கையைச் சேர்ந்த தர்சன், தமிழ்சினிமாவின் முன்னணி இயக்குநரும் நடிகருமான கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகிபாபு நடித்துவரும் கூகிள் குட்டப்பா திரைப்படத்தில் நடிகை லொஸ்லியா முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருகின்றார்.மலையாளத்திரைப்படமான ஆன்ரொய்ட் குஞ்சப்பன் திரைப்படத்தின் தமிழ் remake ஆன இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளதுடன், இத் திரைப்படத்தின் 1st look இம்மாதம் நடிகர் சூர்யாவால் வெளியிடப்பட்டுள்ளது.கடந்த 27ம் திகதி வெளியாகியுள்ள இத்திரைப்படத்தின் teaser 2 மில்லியன் viewers ஐத் தாண்டியுள்ளதுடன் இத் திரைப்படம் அடுத்த வருடம் வெளிவரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் லொஸ்லியாவின் அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் இரசிகர்களால் பகிரப்பட்டுவருகின்றது.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedin
Pinterest
MeWe
Mix
Whatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version