பிரபல நடிகர் அமரசிறி கலன்சூரிய காலமானார்!

இலங்கையின் மூத்த நடிகர் அமரசிறி கலன்சூரிய தனது 82வது வயதில் இன்று (01.04) காலை காலமானார்.

இலங்கை சினிமா, நாடகம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் புகழ்பெற்ற நடிகராக திகழ்ந்த நடிகர் அமரசிறி கலன்சூரிய தன ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை கொண்டிருந்தார்.

தனது முதல் திரைப்படமான ‘ஹந்தானா கத்தாவ’ சிங்கள திரைப்படத்தில் விஜய குமாரதுங்கவுடன் இணைந்து நடித்திருந்தார்.

இந்நிலையில், நடிகர் அமரசிறி கலன்சூரியவின் திடீர் மரணச் செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version