தென்னாபிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டைய்ன் தான் சகலவித கிரிக்கட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2004 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கட் அறிமுகத்தை டேல் ஸ்டைய்ன் மேற்கொண்டார். சர்வதேச கிரிக்கட்டில் 38 வயதான ஸ்டைய்ன் 699 விக்கட்களை கைப்பற்றியுள்ளார். சிறந்த வேகத்தோடு நேர்த்தியாக பந்து வீசியவர் டேல் ஸ்டைய்ன், தான் விளையாடிய காலத்தில் கிரிக்கட்டின் சிறந்த பந்து வீச்சாளர் என்ற பெயரோடு பந்து வீசியவர் டேல் ஸ்டெய்ன்.
தொடர்ச்சியான உபாதைகள் அவரின் ஓய்வுக்கு பிரதானமான காரணமாக அமைந்துள்ளது. உபாதைகளுடன், கொவிட் தொற்று காலம் என்பதனாலும் இனி பயிற்சிகளில் ஈடுபட்டு விளையாடுவது கடினம் என்ன காரணத்தாலும், கொவிட்டில் இருந்து பாதுகாத்து கொள்ளவும் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். 2020 , T20 உலக கிண்ணத்தோடு டேல் ஸ்டைய்ன் ஓய்வு பெறும் திட்டத்தோடு டெஸ்ட் போட்டிகளிலிருந்து அவர் ஓய்வை பெற்றிருந்தார். இருப்பினும் T20 உலக கிண்ணம் இந்த வருடம் வரை பிற்போடப்பட்டது. இனிமேல் அவரால் விளையாட முடியாத நிலையில் அவர் ஓய்வை அறிவித்துள்ளார்.