இந்தியாவை சுற்றும் அஜித்


தமிழ் சினிமாவில் தல எனக் கொண்டாடப்படும் நடிகர் அஜித்குமார் தற்போது இந்தியாவின் பல இடங்களையம் சுற்றி வருகின்றார்.

எச்.வினோத் இயக்கத்தில் தயாரிப்பாளர் போனிக்பூரின் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள வலிமை. திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் அத் திரைப்படம் எதிர்வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

அண்மையில் நடிகர் அஜித் தாஜ்மஹாலில் இரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டதையடுத்து தற்போது அவர் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு வீரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

வலிமை திரைப்படத்தையடுத்து தல உலகளவில் மோட்டர் சைக்கிள் பயணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்தியாவின் முக்கிய இடங்களில் அவர் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் பலராலும் பகிரப்பட்டு வருகின்றன.

இந்தியாவை சுற்றும் அஜித்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version