இலங்கையின் வெற்றி கணக்கு ஆரம்பம்

உலகக்கிண்ண தொடரின் இன்றைய முதற் போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியினை வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணியின் முதல் குழு நிலை போட்டி இது.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.


பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 171 ஓட்டங்களை பெற்றது. மொஹமட் நைம் 62(52), முஸ்பிகீர் ரஹீம் 57(37)ஓட்டங்களை பெற்றனர்.

பந்துவீச்சில் சமிக்க கருணாரட்ண, பினுர பெர்னாண்டோ,லஹிரு குமார ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.


பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 18.5 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 172 ஓட்டங்களை பெற்றது. இதில் ஆட்டமிழக்காமல் சரித் அசலங்க 80(49), பானுக்க ராஜபக்ச 53(31), பத்தும் நிசங்க 24(21) ஓட்டங்களை பெற்றனர்.


பந்துவீச்சில் நசும் அஹமட் 2 விக்கெட்களையும், சஹிப் அல் ஹசன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

சரித் அசலங்க போட்டியின் நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கையின் வெற்றி கணக்கு ஆரம்பம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version