தனுசுடன் இணைந்து நடிக்க மறுத்த நடிகை

யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில் பிக்பொஸ் பிரபலங்களான நடிகர் ஹரிஸ்கல்யான் மற்றும் ரஷிக்காவின் நடிப்பில் இயக்குநர் இளன் இயக்கிய பியார் பிறேம காதல் திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றிருந்தது.


இதனையடுத்து தமிழ் சினிமாவின் தற்போதைய நடிகர்களில் சிறந்த மற்றும் முன்னணி நடிகர்களுள் ஒருவராக விளங்கும் நடிகர் தனுஷை வைத்து மதுரையைக் கதைக்களமாக கொண்ட திரைப்படத்தினை இயக்கவுள்ளார் இயக்கநர் இளன்.


இத்திரைப்படத்திற்கான கதாநாயகியாக உப்பென்னா திரைப்பட நடிகை கீர்த்தி செட்டியிடம் கேட்ட போது அவர் மறுத்துள்ளார். இதனால் இயக்குநர் அவரிடம் அதிக சம்பளம் கொடுத்து நடிப்பதற்கு சம்மதிக்க வைப்பதற்காக பேச்சுவார்த்தை நிகழ்வதாக சினிமாவட்டார தகவல்கள் கசிந்துள்ளன.

தனுசுடன் இணைந்து நடிக்க மறுத்த நடிகை
Social Share
Facebook
Twitter
Reddit
Linkedin
Pinterest
MeWe
Mix
Whatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version