தனுஷ் நடிக்கவுள்ள புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு!

நடிகர் தனுஷ் தற்போது தனது 51 ஆவது படத்திற்கு தயாராகி வருகிறார். பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இந்த படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ், சேகர் கம்முலா ஆகிய இருவருமே தேசிய விருது பெற்றவர்கள் என்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சுனில் நாரங், புஸ்கர் ராம் மோகன்ராவ் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படம் தற்போது அதிரடி ஆக்ஷன் படமாக தயாராகி வருகிறது.

தனுஷ் இதுவரை நடிக்காத புதிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், அவருக்கு ஏற்ற கதையை உருவாக்கும் பணியில் சேகர் கம்முலா ஈடுபட்டு வருவதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

இந்தப் படத்தில் ராஷ்மிகாவை கதாநாயகியாக நடிக்க வைக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version