ஜப்பான், ஸ்பெயின் மகளிர் அணிகள் உலகக்கிண்ண காலிறுதியில்.

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கிண்ண காற்பந்தாட்ட தொடரின் முன்னோடி காலிறுத்திச்சுற்று இன்று ஆரம்பமாகியது.

முதற் போட்டியில் ஜப்பான் அணி 3-1 என நோர்வே அணியை வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிகளுக்கு சென்றுள்ளது. 2011 ஆம் ஆண்டு முதற் தடவையாக சம்பியனாகிய ஜப்பான் மகளிர் அணி 2015 ஆம் ஆண்டு இரண்டாமிடத்தை பெற்றுக் கொண்டது. கடந்த ,முறை முன்னோடி காலிறுதிச் சுற்றுடன் வெளியேறியிருந்தது.

இரண்டாவது போட்டியில் ஸ்பெயின் மகளிர் அணி 5-1 என சுவிற்சலாந்து மகளிர் அணியை வெற்றி பெற்றது. ஸ்பெயின் மகளிர் அணி உலகக்கிண்ண காற்பந்து தொடரில் காலிறுத்திச்சுற்றுக்கு தெரிவாவது இதுவே முதற்தடவையாகும்,

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version