யாழ் அணியின் பந்துவீச்சில் தடுமாறிய தம்புள்ளை

ஜப்னா கிங்ஸ் மற்றும் தம்புள்ளை ஓரா அணிகளுக்கிடையிலான LPL தொடரின் இன்றைய நாளின் இரண்டாம் போட்டியில் துடுப்பாடிய தம்புள்ளை அணி தடுமாறி போராடக்கூடிய ஓட்ட இலக்கு ஒன்றை பெற்றுள்ளது. 20 ஓவர்களில் 08 விக்கெட் இழப்பிற்கு 134 ஓட்டங்களை’பெற்றுள்ளது.

றன் அவுட் மூலம் முதல் விக்கெட்டையும், கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய குஷல் மென்டிஸின் விக்கெட்டையும் வேகமாக இழந்து தடுமாறிய தம்புள்ளை அணிக்கு குஷல் பெரேரா, சதீர சமரவிக்ரம ஆகியோரது இணைப்பாட்டம் ஓரளவு கைகொடுத்து மீட்டு எடுத்தது. 51 ஓட்ட இணைப்பாட்டம் முறியடிக்கப்பட மீண்டும் விக்கெட்கள் அடுத்தடுத்து வீழ்த்தப்பட்டன. இதன் காரணமாக குறைந்த ஓட்டங்களுக்குள் தம்புள்ளை அணி கட்டுப்படுத்தப்பட்டது.

யாழ் அணியில் இன்று இணைந்து கொண்ட சொஹைப் மலிக் சிறப்பாக பந்துவீசினார். மஹீஸ் தீக்ஷனவின் பந்துவீச்சும் ஆரம்பத்திலேயே சிறப்பாக அமைந்தது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
அவிஷ்க பெர்னாண்டோRun Out 000100
குசல் மென்டிஸ்பிடி – சொஹைப் மலிக்மஹீஸ் தீக்ஷண000200
சதீர சமரவிக்ரமBowledடுனித் வெல்லாளகே302540
குசல் பெரேராBowledசொஹைப் மலிக்413630
தனஞ்சய டி சில்வாBowledசொஹைப் மலிக்040900
அலெக்ஸ் ரோஸ்Run Out 050800
ஜனித் லியனகேபிடி – டேவிட் மில்லர்நுவான் துஷார060900
ஹெய்டன் கெர்  252021
ஹசன் அலிபிடி – டேவிட் மில்லர்நுவான் துஷார080800
நூர் அஹமட்       
பினுர பெர்னாண்டோ     
உதிரிகள்  08   
ஓவர்  20விக்கெட்  08மொத்தம்134   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்ட விக்
மஹீஸ் தீக்ஷண04002601
நுவான் துஷார04002602
டில்ஷான் மதுசங்க03002200
விஜயகாந் வியாஸ்காந்02001800
டுனித் வெல்லாளகே03002801
சொஹைப் மலிக்04001302

அணி விபரம்.

ஜப்னா கிங்ஸ் – 1 திஸர பெரேரா, 2 விஜயகாந் வியாஸ்காந், 3 ரஹ்மனுள்ள குர்பாஸ், 4 டுனித் வெல்லாளகே, 5 மஹீஸ் தீக்ஷண, 6 சொஹைப் மலிக், 7 டேவிட் மில்லர் 8 சரித் அஸலங்க 9 டில்ஷான் மதுசங்க 10 நுவான் துஷார 11 தௌஹித் ரிதோய்

தம்புள்ளை ஓரா : குசல் மென்டிஸ் (wk & c), அவிஷ்க பெர்னாண்டோ, குசல் பெரேரா, சதீர சமரவிக்ரம, தனஞ்சய டி சில்வா, அலெக்ஸ் ரோஸ், ஹெய்டன் கெர், பினுர பெர்னாண்டோ,ஹசன் அலி, ஜனித் லியனகே, நூர் அஹமட்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version