கண்டு பிடிக்கப்பட்ட 29,900 மெட்ரிக் தொன் சீனி மக்களுக்கு விநியோகம்

பதுக்கி வைக்கப்பட்டிருந்த மிகப் பெருமளவிலான சீனி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் சீனியைக் கண்டுபிடிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது களஞ்சியசாலைக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் 29,900 மெட்ரிக் தொன் சீனி, நேற்று (01.09.2021) கண்டு பிடிக்கப்பட்ட சீனி அரசுடமையாக்கப்பட்டதாக, அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் என்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல தெரிவித்துள்ளார். இந்தச் சீனித் தொகை, கட்டுப்பாட்டு விலையில், அரச மற்றும் தனியார் வர்த்தக நிலையங்களின் ஊடாக நுகர்வோர் பெருமக்களுக்கு விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version