நடிகை திவ்யா ஸபந்தனா உயிரிழப்பு?

நடிகையும், அரசியல்வாதியுமான திவ்யா ஸபந்தனா திடீரென காலமானார் என்ற பொய்யான தகவல் ஒன்று சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திவ்யா ஸபந்தனா நலமாக இருப்பதாக தமிழக காங்கிரஸ் கட்சி உறுதி படுத்தியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சில ஊடகங்கள் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக தெரிவித்துள்ளது.

40 வயதான அவர், பொல்லாதவன், குத்து, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version