சசித்ர சேனாநாயக்க கைது!

ஆட்ட நிர்ணயம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு லங்கா பிரீமியர் லீக்கில் ஆட்ட நிர்ணயம் செய்தமை தொடர்பில் சசித்ர சேனாநாயக்க விளையாட்டு அமைச்சின் விசேட புலனாய்வுப் பிரிவில் (SIU) சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டிந்த நிலையில் இன்று (06.09) இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version