இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் அபார வெற்றியைப் பெற்ற இலங்கை மகளிர் அணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (08.09) தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இது குறித்து பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையில், தனித்திறமையும் இடைவிடாத முயற்சியும் உண்மையிலேயே இலங்கை முழுவதும் உள்ள அனைத்து இரசிகர்களுக்கும் உத்வேகம் அளித்துள்ளதாக தெரிவித்த அவர்,
தெற்காசியாவிற்கு வெளியே 14 வருடங்களின் பின்னர் இங்கிலாந்துக்கு எதிரான T20 போட்டியில் இலங்கை மகளிர் கிரிக்கட் அணி வெற்றிபெற்றுள்ளதாகவும், அதனை வழிநடத்திய சாமரி அத்தபத்து உள்ளிட்ட மகளிர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்களையும் மரியாதையையும் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.