”நா ரெடியா வரவா” பாடலில் சில வரிகள் நீக்கம்!

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ. இந்த படம் வரும் ஒக்டோபர் மாதம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது நடத்தப்படும் என இரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

இதற்கிடையில் சமீபகாலமாக சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டாகி வந்த ”நா ரெடியா வரவா” பாடலில் சில மாற்றங்களை மேற்கொள்ளுமாறு சென்சார் போர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த பாடலில் இடம்பெற்றுள்ள சில வரிகள் மது பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளதாக கூறி சர்சை எழுந்தது. இந்நிலையில், தற்போது பாடலில் இடம்பெற்றுள்ள சில வரிகளில் மாற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய இந்த பாடலில் இடம்பெற்றுள்ள நான் குடிக்க அண்டாவை கொண்டுவா, மில்லி உள்ளே போனா கில்லி வெளியே வருவான்” ஆகிய வரிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் 4.17 நிமிடங்கள் கொண்ட இந்த பாடலில் 32 வினாடிகள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version