கொவிட் 19 தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக வெளியில் எடுத்துச்செல்வது தொடர்பில் சட்டத்துறையின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
சட்டமா அதிபரினால் குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சட்டமா அதிபருடன் இன்றைய தினம் மேற்கொண்ட கலந்துரையாடலுக்கு அமைய இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் 19 தடுப்பூசி அட்டைகளை வெளியில் எடுத்து செல்வது கட்டாயமாக்குவது தொடர்பில் கடந்த நாட்களில் சட்டத்துறையின் ஆலோசனையை கோரியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.