தென்னிந்திய திரைப்பட நடிகர்களான தனுஷ், விஷால், அதர்வா, சிம்பு ஆகிய நான்கு நடிகர்களுக்கு ரெட் கார்டு கொடுக்க தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டத்தில் இது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிம்பு மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தனுஷ் தேனாண்டாள் முரளி தயாரிக்கும் படத்தில் 80 வீத படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், படப்பிடிப்பில் கலந்துகொள்ளாதமைக்கும், தயாரிப்பாளர் மதியழகன் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் அதர்வாவிற்கும் ரெட் கார்டு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நடிகர் விஷாலுக்கு தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்த சந்தர்ப்பத்தில், பணத்தை முறையாக வரவு, செலவு வைக்காதமைக்காக ரெட் கார்டு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.