தடை விதிக்கப்பட்ட வீரர்களை மீள இணைத்துக்கொள்ள கோரிக்கை

உலக கிண்ண 20-20 தொடரில் இலங்கை கிரிக்கெட் அணி பின்னடைவை சந்தித்திருந்த நிலையில், போட்டி தடை விதிக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் மூவரையும் மீளவும் அணியில் இணைத்துக்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று(08/11) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, குறித்த விடயத்தில் ஒழுக்காற்று பிரச்சினையே பிரதான காரணமாக அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது உயிர் குமிழி விதிமுறைகளை மீறி செயற்பட்ட குசல் மெண்டிஸ், நிரோஷன் திக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோருக்கு உள்ளுர் மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version