இந்தியாவில் தீ விபத்தில் சிக்கி 4 சிசுக்கள் மரணம்

இந்தியா – மத்திய பிரதேஷ் மாநிலத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் புதிதாக பிறந்த நான்கு சிசுக்கள் உயிரிழந்துள்ளன.

கம்லா நேரு சிறுவர் வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (08/11) ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியே குறித்த சிசுக்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் 36 சிசுக்கள் வரை காப்பற்றப்பட்டதாகவும் அந்நாட்டு தகவல்கள் மூலம் அறியமுடிகிறது.

மின்சார கோளாரின் காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக காரணம் கண்டறியப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 400,000 ரூபாய் நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்தியாவில் வைத்தியசாலைகளில் தீ விபத்துகள் ஏற்படுவது அசாதாரண விடயம் அல்ல என்ற விமர்சனங்களும் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்தியாவில் தீ விபத்தில் சிக்கி 4 சிசுக்கள் மரணம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version