கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியில் நேற்று முன்தினம் (08/11) காணமற்போயிருந்த சிறுமிகள் மூவரும் நேற்று (09/11) வீடு திரும்பியுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹல் தல்துவ இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
நேற்று முன்தினம் (08/11) காணமற்போயிருந்த மூன்று சிறுமிகள் தொடர்பில் அவர்களது உறவினர்களால் வாழைத்தோட்ட பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தேடப்பட்டு வந்த சிறுமிகள் நேற்று மாலை வீடு திரும்பியள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
13 – 15 வயதுக்குட்பட்ட சகோதரிகள் இருவரும் உறவுக்கார சிறுமி ஒருவருமே இவ்வாறு காணமற்போயிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சகோதரிகள் இருவரும் அவர்களது கையில் தாயாரின் அலைப்பேசியை உடன் வைத்திருந்த நிலையில், அதனூடாக அவர்களை கண்காணித்து மூவரும் இருக்கும் இடத்தை கண்டறிந்துகொண்டதாக வாழைத்தோட்ட பொலிஸார் தெரிவித்தனர்.