சரிந்தது ஜாம்பவானின் சாம்ராஜ்யம்

தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் லக்னோவில் நடைபெற்ற உலகக்கிண்ண போட்டியில் தென்னாபிரிக்கா அணி 134 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. அவுஸ்திரேலியா அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. அவுஸ்திரேலியா அணி முதல் சுற்றில் இவ்வாறு அடுத்தடுத்து இரண்டு தோல்விகளை சந்தித்திருப்பது இதுவே முதற்தடவையாகும். இந்த தோல்விகள் அரை இறுதிப் போட்டிகளுக்கு தெரிவு செய்யும் வாய்ப்பை அவுஸ்திரேலியா அணிக்கு கடினமாக்கியுள்ளது.

312 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 40.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 177 ஓட்டங்களை பெற்றது. அவுஸ்திரேலியா அணியின் ஆரம்ப விக்கெட்களை தென்னாபிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் அடுத்தடுத்து சாய்த்தனர். இதன் காரணமாக தடுமாறிய அவுஸ்திரேலியா அணியின் மத்திய விக்கெட்களும் வேகமாக வீழந்தன. கஜிசோ ரபாடா சிறப்பாக பந்துவீசினார்.

அவுஸ்திரேலியா அணி உலகக்கிண்ண வரலாற்றால் பெற்ற மோசமான தோல்வியாக இந்த தோல்வியை கருதலாம்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி கத்தடுப்பை தெரிவு செய்தது. தென்னாபிரிக்கா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குயின்டன் டி கொக் பெற்றுக் கொடுத்த சதம் மூலம் 300 ஓட்டங்களை தாண்டியது. ஆரம்பம் முதலே நல்ல முறையில் துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி வெற்றி பெறக்கூடிய ஓட்ட எண்ணிக்கையான 311 ஓட்டங்களை 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து பெற்றுக்கொண்டது.

ரெம்பா பவுமா, குயின்டன் டி கொக் ஜோடி சத இணைப்பாட்டத்தை பெற்றது. அதன் பின்னர் தொடர்ச்சியான சராசரியான இணைப்பாட்டங்கள் பகிரப்பட்டன. எய்டன் மார்க்ராம் அரைச்சதத்தை பூர்த்தி செய்தார்.

கிளென் மக்ஸ்வெல் சிறப்பாக பந்துவீசி இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார். அவுஸ்திரேலியா அணியின் முன்னணி பந்துவீச்சாளர் மிற்செல் ஸ்டார்க் ஓட்டங்களை அதிகம் வழங்கமால் இறுக்கமாக பந்துவீசிய போதும் ஆரம்ப விக்கெட்களை தகர்க்க முடியாமல் போனது.

அவுஸ்திரேலியா அணி களத்தடுப்பில் சிறந்த அணி. ஆனாலும் இன்று நான்கு பிடிகளை தவறவிட்டது அவர்களுக்கு பின்னடைவை வழங்கியுள்ளது.

அதிகம் எதிர்பார்க்கப்படாத தென்னாபிரிக்கா அணி மிக அபாரமாக விளையாடி வருகிறது. அவர்கள் இனிதான் கடினமான அணிகளை சந்திக்கப்போகிறார்கள்.

இன்றுடன் முதல் சுற்றின் இரண்டாம் கட்டப் போட்டிகள் நிறைவுக்கு வந்துள்ளன.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
மிற்செல் மார்ஷ்பிடி – ரெம்பா பவுமாமார்கோ ஜனேசன்071500
டேவிட் வோர்னர்பிடி – ரஷி வன் டேர் டுசென்லுங்கி நிகிடி132720
ஸ்டீபன் ஸ்மித்L.B.Wககிசோ ரபாடா191640
மார்னஸ் லபுஷேன்பிடி – ரெம்பா பவுமாகேசவ் மகராஜ்467430
ஜோஷ் இங்லிஷ்Bowledககிசோ ரபாடா050410
க்ளன் மக்ஸ்வெல்பிடி – கேசவ் மகராஜ்கேசவ் மகராஜ்031700
மார்க்ஸ் ஸ்ரோய்னிஸ்பிடி – குயின்டன் டி கொக்ககிசோ ரபாடா050410
மிட்செல் ஸ்டார்க்பிடி – குயின்டன் டி கொக்மார்கோ ஜனேசன்275130
பட் கம்மின்ஸ்பிடி – டேவிட் மில்லர்ரப்ரைஸ் ஷம்ஸி222140
அடம் ஷம்பா  111610
ஜோஸ் ஹெஸல்வூட்பிடி – ககிசோ ரபாடாரப்ரைஸ் ஷம்ஸி020200
உதிரிகள்  17   
ஓவர்  40.5விக்கெட்  10மொத்தம்177   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
லுங்கி நிகிடி08021801
மார்கோ ஜனேசன்07005402
ககிசோ ரபாடா08013303
கேசவ் மகராஜ்10003002
ரப்ரைஸ் ஷம்ஸி7.5003802
வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
குயின்டன் டி கொக்Bowledக்ளன் மக்ஸ்வெல்10910685
ரெம்பா பவுமாபிடி – டேவிட் வோர்னர்க்ளன் மக்ஸ்வெல்355550
ரஷி வன் டேர் டுசென்பிடி – சீன் அபோட்அடம் ஷம்பா   263020
எய்டன் மார்க்ரம்பிடி – ஜோஸ் ஹெஸல்வூட்பட் கம்மின்ஸ்564471
ஹெய்ன்ரிச் கிளாசன்பிடி – ஜோஸ் இங்கிலிஸ் ஜோஸ் ஹெஸல்வூட்292730
டேவிட் மில்லர்Bowledமிட்செல் ஸ்டார்க்171311
மார்கோ ஜன்சன்பிடி – டேவிட் வோர்னர்மிட்செல் ஸ்டார்க்262231
ககிசோ ரபாடா  000100
கேசவ் மகராஜ்  000200
       
       
உதிரிகள்  13   
ஓவர்  50விக்கெட்  07மொத்தம்311   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
மிட்செல் ஸ்டார்க்09015302
ஜோஸ் ஹெஸல்வூட்09006001
க்ளன் மக்ஸ்வெல்10013402
பட் கம்மின்ஸ்09007101
அடம் ஷம்பா   10007001
மிற்செல் மார்ஷ்01000600
மார்க்ஸ் ஸ்ரோய்னிஸ்02001100

புள்ளிப்பட்டியல்

அணி  போவெதோச/ கைபுஓட்ட சராசரி வேகம்
தென்னாபிரிக்கா02020000042.360
நியூசிலாந்து02020000041.958
இந்தியா02020000041.500
பாகிஸ்தான்02020000040.927
இங்கிலாந்து02010100020.553
பங்களாதேஷ்0201010002-0.653
இலங்கை0200020000-1.161
நெதர்லாந்து0200020000-1.800
அவுஸ்திரேலியா0200020000-1.846
ஆப்கானிஸ்தான்0200020000-1.907
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version