சீமெந்து தட்டுப்பாடு இனி இல்லை

நாட்டில் ஏற்பட்டுள்ள சீமெந்து தட்டுபாட்டுக்கு விரைவில் தீர்வு கிடைக்கவுள்ளதாக சீமெந்து இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் மாதத்தின் நடுப்பகுதியில் சீமெந்து கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ள நிலையில், தற்போதை பிரச்சினை முடிவுக்குக் கொண்டுவரப்படும் என அச்சங்கம் தெரிவித்துள்ளது.

அண்மை காலமாக அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருள் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் தட்டுப்பாட்டினை தொடர்ந்து சீமெந்துக்கான கேள்வியும் அதிகரித்திருந்த நிலையில், கட்டட நிர்மாணத்துறையினர் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

சீமெந்து தட்டுப்பாடு இனி இல்லை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version