முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க உடல் உபாதைக்குள்ளாகிய நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (10/11) ரஞ்சனுக்கு முழங்காலில் ஏற்பட்ட உபாதையின் காரணமாக அவர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் எலும்புமுறிவு பிரிவில் மேலதிக சிசிக்சைகளை பெற்றுக்கொள்ளுமாறு வைத்தியசாலையில் அறிவுறுத்தப்பட்டிருந்ததற்கு அமைய, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இன்று (11/11) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து எதிர்வரும் 16ஆம் திகதி மீளவும் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு வருகைதர வேண்டுமென வைத்தியசாலையில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சந்தன ஏக்கநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.