‘குற்றம் நிரூபிக்கப்பட்டால் இராஜினாமா செய்வேன்’ – மைத்தரி

மூன்று குடியிருப்புகளை இணைத்து நிர்மாணிக்கப்பட்ட குடியிருப்பில் தான் வசிப்பதாக முன்வைத்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (11/11) அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன மூன்று குடியிருப்புகளை இணைத்து கட்டப்பட்ட குடியிருப்பில் வசித்து வருவதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

‘அப்படியானால் அது நிரூபிக்கப்படும் பட்சத்தில் நான் பாராளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்கிறேன்’ என மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version