விறுவிறுப்பான நியூசிலாந்து, பாகிஸ்தான் போட்டி ஆரம்பம்

விறுவிறுப்பான நியூசிலாந்து, பாகிஸ்தான் போட்டி ஆரம்பம்

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் உலககிண்ணத்தொடரின் 35 ஆவது போட்டி இன்று (04.10) பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் ஆரம்பித்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் தங்களது 8 ஆவது போட்டியை விளையாடவுள்ளன. இன்று மதியம் 2.00 மணிக்கு அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி அஹமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இந்த இரு அணிகளும் தங்களது 7 ஆவது போட்டியை விளையாடவுள்ளன.

நியூசிலாந்து அணி இன்று வெற்றி பெற்றால் அரை இறுதி வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ளலாம். பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் அவர்களும் அரை இறுதி வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ளலாம். பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தால் கிட்டத்தட்ட வெளியேறும் நிலைமை உருவாகும். நியூசிலாந்து அணி தோல்வியடைந்தால் வெளியேறும் அபாயம் ஏற்படும்.

இவ்வாறான நிலையில் இன்றைய போட்டி விறு விறுப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.
அணி விபரம்

நியூசிலாந்து அணி: வில் ஜங், டிரென்ட் போல்ட், ஜேம்ஸ் நீஷாம், டெவோன் கொன்வே, டிம் சௌதி, மட் ஹென்றி, ரொம் லெதாம்(தலைவர்), டெரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திர, மிட்செல் சென்ட்னர்

பாகிஸ்தான் அணி: பபர் அசாம் (தலைவர்), அகா சல்மான், அப்துல்லா ஷபிக், பக்கர் சமான் , முகமட் ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமட், ஹரிஸ் ரவூப், மொஹமட் வசீம், ஷஹீன் அப்ரிடி, உசாமா மிர்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version