நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் உலககிண்ணத்தொடரின் 35 ஆவது போட்டி இன்று (04.10) பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 21 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியின் இந்த வெற்றி காரணமாக தென்னாபிரிக்கா அணி அடுத்த சுற்றிற்கு தெரிவாகியுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
நியூசிலாந்து அணியின் முதல் விக்கெட் இணைப்பாட்டம் சிறப்பாக அமைந்தது. முதல் விக்கெட் வீழ்ந்தவுடன் ஜோடி சேர்ந்த கென் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திர ஆகியோர் சிறப்பாக துடுப்பாடி 180 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்ததுடன் ஓட்ட எண்ணிக்கையை உயரத்திக்கொடுத்தனர். ரச்சின் ரவீந்திர அவரது 3 ஆவது சதத்தை பூர்த்தி செய்துகொண்டார். கேன் வில்லியம்சன் சிறந்த மீள்வருகை ஒன்றை ஏற்றப்படுத்தியிருந்தார். அவர் அவரது சதத்தை 5 ஓட்டங்களினால் தவற விட்டிருந்தார். கேன் வில்லியம்சன் ஆட்டமிழந்ததுடன் மற்றைய விக்கெட்டும் வேகமாக வீழ்த்தப்பட்டது. 4 ஆவது விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேர்ந்த டெரில் மிட்செல், மார்க் சப்மன் ஆகியோர் அதிரடியாக துடுப்பாடி 57 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். நியூசிலாந்து அணி இந்த உலககிண்ணத்தில் முதல் தடவையாக 400 ஓட்டங்களை தொட்டிருக்கிறது.
நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 401 ஓட்டங்களை பெற்றது.
பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் போது மழை குறுக்கிட்டமை காரணாமாக பாகிஸ்தான் அணிக்கு டக்வைத்த லுயிஸ் முறையில் 41 ஓவர்களில் 342 ஓட்டங்கள் வெற்றி இலக்கு என குறைக்கப்பட்டன. பாகிஸ்தான் அணியின் முதல் விக்கெட் வேகமாக வீழ்த்தப்பட்டது. 2 ஆவது விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேர்ந்த பாபர் அசாம், பக்கர் சமான் ஆகியோர் 194 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். இந்த இணைப்பாட்டத்தில் பக்கர் சமான் அவரது பத்தாவது சதத்தை அதிரடியாக துடுப்பாடி 63 பந்துகளில் பூர்த்தி செய்து மீள்வருகை ஒன்றை ஏற்படுத்தியுள்ளார். பாபர் அசாமும் சிறப்பாக துடுப்பாடி 31 ஆவது அரைச்சதத்தையும் இந்த உலககிண்ணத்தில் முதலாவது அரைச்சதத்தையும் பூர்த்தி செய்து கொண்டார். மீண்டும் மழை குறுக்கிட்ட நேரத்தில் பாகிஸ்தான் அணி 25.3 ஓவர்களில் 200 ஓட்டங்களை பெற்ற நிலையில் காணப்பட்டது. 25.3 ஓவர்களில் பாகிஸ்தான் அணியின் டக்வைத்த லுயிஸ் இலக்கை விட 21 ஓட்டங்கள் அதிகமாக பெற்றிருந்த காரணத்தால் தான் இந்த வெற்றியினை பெற முடிந்தது.
பாகிஸ்தான் அணி 25.3 ஓவர்களில் 1 விக்கெட்டினை மாத்திரம் இழந்து 200 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
அப்துல்லா ஷபீக் | பிடி – கேன் வில்லியம்சன் | டிம் சௌதி | 04 | 09 | 1 | 0 |
பக்கர் சமான் | 126 | 81 | 8 | 11 | ||
பபர் அசாம் | 66 | 63 | 6 | 2 | ||
உதிரிகள் | 04 | |||||
ஓவர் 25.3 | விக்கெட் 01 | மொத்தம் | 200 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
டிரென்ட் போல்ட் | 06 | 00 | 50 | 00 |
டிம் சௌதி | 05 | 00 | 27 | 01 |
மிட்செல் சென்ட்னர் | 05 | 00 | 35 | 00 |
கிளென் பிலிப்ஸ் | 05 | 01 | 42 | 00 |
இஷ் சோதி | 04 | 00 | 44 | 00 |
டெரில் மிட்செல் | 0.3 | 00 | 01 | 00 |
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
டெவோன் கொன்வே | பிடி – முகமட் ரிஸ்வான் | ஹசன் அலி | 35 | 39 | 6 | 0 |
ரச்சின் ரவீந்திர | பிடி – சவுத் ஷகீல் | மொஹமட் வசீம் | 108 | 94 | 15 | 1 |
கேன் வில்லியம்சன் | பிடி – பக்கர் சமான் | இப்திகார் அகமட் | 95 | 79 | 10 | 2 |
டெரில் மிட்செல் | Bowled | ஹரிஸ் ரவூப் | 29 | 18 | 4 | 1 |
மார்க் சப்மன் | Bowled | மொஹமட் வசீம் | 39 | 27 | 7 | 0 |
கிளென் பிலிப்ஸ் | Bowled | மொஹமட் வசீம் | 41 | 25 | 4 | 2 |
மிட்செல் சென்ட்னர் | 26 | 17 | 0 | 2 | ||
ரொம் லெதாம் | 02 | 02 | 0 | 0 | ||
உதிரிகள் | 26 | |||||
ஓவர் 50 | விக்கெட் 06 | மொத்தம் | 401 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட் | விக் |
ஷஹீன் அப்ரிடி | 10 | 00 | 90 | 00 |
ஹசன் அலி | 10 | 00 | 82 | 01 |
இப்திகார் அகமட் | 08 | 00 | 55 | 00 |
ஹரிஸ் ரவூப் | 10 | 00 | 85 | 01 |
மொஹமட் வசீம் | 10 | 00 | 60 | 03 |
அகா சல்மான் | 02 | 00 | 21 | 00 |
அணி | போ | வெ | தோ | ச/ கை | பு | ஓட்ட சராசரி வேகம் |
இந்தியா | 07 | 07 | 00 | 00 | 14 | 2.102 |
தென்னாபிரிக்கா | 07 | 06 | 01 | 00 | 12 | 2.290 |
அவுஸ்திரேலியா | 06 | 04 | 02 | 00 | 08 | 0.970 |
நியூசிலாந்து | 08 | 04 | 04 | 00 | 08 | 0.398 |
பாகிஸ்தான் | 08 | 04 | 04 | 00 | 08 | 0.036 |
ஆப்கானிஸ்தான் | 07 | 04 | 03 | 00 | 08 | -0.330 |
இலங்கை | 07 | 02 | 04 | 00 | 04 | -1.162 |
நெதர்லாந்து | 06 | 02 | 04 | 00 | 04 | -1.277 |
பங்களாதேஷ் | 07 | 01 | 06 | 00 | 02 | -1.446 |
இங்கிலாந்து | 06 | 01 | 05 | 00 | 02 | -1.652 |
அணி விபரம்
நியூசிலாந்து அணி: கேன் வில்லியம்சன் (தலைவர்), டெவோன் கொன்வே, மார்க் சப்மன், ரொம் லெதாம், டெரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திர, மிட்செல் சென்ட்னர், டிரென்ட் போல்ட், இஷ் சோதி, டிம் சௌதி,
பாகிஸ்தான் அணி: பபர் அசாம் (தலைவர்), அகா சல்மான், அப்துல்லா ஷபிக், பக்கர் சமான் , முகமட் ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமட், ஹரிஸ் ரவூப், மொஹமட் வசீம், ஷஹீன் அப்ரிடி, ஹசன் அலி