அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடயில் உலககிண்ணத்தொடரின் 36 ஆவது போட்டி இன்று (04.11) அஹமதாபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அவுஸ்திரேலியா அணி 33 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
அவுஸ்திரேலியா அணியின் முதலிரு விக்கெட்களும் வேகமாக வீழ்த்தப்பட்டன. 3 ஆவது விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேர்ந்த மார்னஸ் லபுஷேன், ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் சிறப்பாக துடுப்பாடி 75 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்ததுடன் ஓட்ட எண்ணிக்கையினையும் உயர்திக் கொடுத்தனர். ஸ்டீவன் ஸ்மித் ஆட்டமிழந்ததுடன் அடுத்த விக்கெட் வேகமாக வீழ்த்தப்பட்டது. மார்னஸ் லபுஷேன் சிறப்பாக துடுப்பாடி அவரது 10 ஆவது அரைச்சதத்தைத்தையும் இந்த உலககிண்ணத்தில் 2 ஆவது அரைச்சதத்தையும் பூர்த்தி செய்து கொண்டார். 5 ஆவது விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேந்த கமரூன் கிரீன், மார்னஸ் லபுஷேன் ஆகியோர் 61 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். கிறிஸ் வோக்ஸ் சிறப்பாக பந்துவீசி அவுஸ்திரேலியா அணியின் முதலிரு விக்கெட்களையும் தகர்த்த்துக்கொடுத்தார். ஆதில் ரஷீத் சிறப்பாக பந்துவீசி அவுஸ்திரேலியா அணியின் முக்கியமான விக்கெட்களை தகர்த்துக்கொடுத்தார். இறுதி நேரத்தில் மார்கஸ் ஸ்ரொய்னிஸ் அதிரடியாக துடுப்பாடி ஓட்ட எண்ணிக்கையை உயர்த்திக்கொடுத்தார். அவர் அட்டமிழந்ததுடன் அடம் ஷம்பா அதிரடியாக துடுப்பாடி ஓரளவு ஓட்ட எண்ணிக்கையை உயர்திக்கொடுத்தார்.
அவுஸ்திரேலியா அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 286 ஓட்டங்களை பெற்றது.
இங்கிலாந்து அணியின் முதலிரு விக்கெட்களும் மிக வேகமாக வீழ்த்தப்பட்டன. 3 ஆவது விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேர்ந்த டேவிட் மலான், பென்ஸ் ஸ்ட்ரோக்ஸ் ஆகியோர் 84 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டதுடன் ஓட்ட எண்ணிக்கையினையும் உயர்த்திக் கொடுத்தனர். டேவிட் மலான் ஆட்டமிழந்ததுடன் அடுத்த விக்கெட் விக்கெட் வேகமாக வீழத்தப்பட்டது. 5 ஆவது விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேர்ந்த மொயின் அலி, பென்ஸ் ஸ்ட்ரோக்ஸ் ஆகியோர் 63 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். பென்ஸ் ஸ்ட்ரோக்ஸ் சிறப்பாக துடுப்பாடி அவரது அரைச்சதத்தைபூர்த்தி செய்துகொண்டார். அடம் சம்பா இறுக்கமாக பந்துவீசி இங்கிலாந்து அணியின் முக்கியமான விக்கெட்களைத் தகர்த்துக் கொடுத்தார்.
இங்கிலாந்து அணி 48.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 253 ஓட்டங்களை பெற்றது.
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
ஜொனி பார்ஸ்டோவ் | பிடி- ஜோஷ் இங்கிலிஸ் | மிட்செல் ஸ்டார்க் | 00 | 01 | 0 | 0 |
டாவிட் மலான் | பிடி- ட்ரவிஸ் ஹெட் | பட் கம்மின்ஸ் | 50 | 64 | 4 | 1 |
ஜோ ரூட் | பிடி- ஜோஷ் இங்கிலிஸ் | மிட்செல் ஸ்டார்க் | 13 | 17 | 2 | 0 |
பென்ஸ் ஸ்ட்ரோக்ஸ் | பிடி- மார்கஸ் ஸ்ரொய்னிஸ் | அடம் ஷம்பா | 64 | 90 | 2 | 3 |
ஜோஸ் பட்லர் | பிடி- கமரூன் கிரீன் | அடம் ஷம்பா | 01 | 07 | 0 | 0 |
லியாம் லிவிங்ஸ்டன் | பிடி- சீன் அபொட் | பட் கம்மின்ஸ் | 02 | 05 | 0 | 0 |
மொயீன் அலி | பிடி- டேவிட் வோர்னர் | அடம் ஷம்பா | 42 | 43 | 6 | 0 |
கிறிஸ் வோக்ஸ் | பிடி- மார்னஸ் லபுஷேன் | மார்கஸ் ஸ்ரொய்னிஸ் | 32 | 33 | 4 | 1 |
டேவிட் வில்லி | பிடி- அடம் ஷம்பா | ஜோஸ் ஹெஸல்வூட் | 15 | 14 | 3 | 0 |
ஆடில் ரஷிட் | பிடி- ஜோஷ் இங்கிலிஸ் | ஜோஸ் ஹெஸல்வூட் | 20 | 15 | 1 | 1 |
மார்க் வூட் | 00 | 00 | 0 | 0 | ||
உதிரிகள் | 14 | |||||
ஓவர் 48.1 | விக்கெட் 10 | மொத்தம் | 253 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
மிட்செல் ஸ்டார்க் | 10 | 00 | 66 | 02 |
ஜோஸ் ஹெஸல்வூட் | 9.1 | 01 | 49 | 02 |
பட் கம்மின்ஸ் | 10 | 01 | 49 | 02 |
அடம் ஷம்பா | 10 | 00 | 21 | 03 |
ட்ரவிஸ் ஹெட் | 05 | 00 | 28 | 00 |
மார்கஸ் ஸ்ரொய்னிஸ் | 04 | 00 | 34 | 01 |
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
ட்ரவிஸ் ஹெட் | பிடி – ஜோ ரூட் | கிறிஸ் வோக்ஸ் | 11 | 10 | 1 | 0 |
டேவிட் வோர்னர் | பிடி – டேவிட் வில்லி | கிறிஸ் வோக்ஸ் | 15 | 16 | 1 | 1 |
ஸ்டீவன் ஸ்மித் | பிடி – மொயீன் அலி | ஆதில் ரஷீட் | 44 | 52 | 3 | 0 |
மார்னஸ் லபுஷேன் | L.B.W | மார்க் வூட் | 71 | 83 | 7 | 0 |
ஜோஷ் இங்லிஷ் | பிடி – மொயீன் அலி | ஆதில் ரஷீட் | 03 | 06 | 0 | 0 |
கமரூன் கிரீன் | Bowled | டேவிட் வில்லி | 47 | 52 | 5 | 0 |
மார்கஸ் ஸ்ரொய்னிஸ் | பிடி – ஜொனி பாஸ்டோ | லியாம் லிவிங்க்டன் | 35 | 32 | 2 | 3 |
பட் கம்மின்ஸ் | பிடி – டாவிட் மலான் | மார்க் வூட் | 10 | 13 | 1 | 0 |
மிட்செல் ஸ்டார்க் | பிடி – மொயீன் அலி | கிறிஸ் வோக்ஸ் | 10 | 13 | 0 | 0 |
அடம் ஷம்பா | பிடி – ஜோஸ் பட்லர் | கிறிஸ் வோக்ஸ் | 29 | 19 | 4 | 0 |
ஜோஸ் ஹெஸல்வூட் | 01 | 01 | 0 | 0 | ||
உதிரிகள் | 10 | |||||
ஓவர் 49.3 | விக்கெட் 10 | மொத்தம் | 286 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
டேவிட் வில்லி | 10 | 01 | 48 | 01 |
கிறிஸ் வோக்ஸ் | 9.3 | 00 | 54 | 04 |
மார்க் வூட் | 10 | 00 | 70 | 02 |
லியாம் லிவிங்க்டன் | 06 | 00 | 42 | 01 |
மொயீன் அலி | 04 | 00 | 28 | 00 |
ஆதில் ரஷீட் | 10 | 00 | 38 | 02 |
அணி | போ | வெ | தோ | ச/ கை | பு | ஓட்ட சராசரி வேகம் |
இந்தியா | 07 | 07 | 00 | 00 | 14 | 2.102 |
தென்னாபிரிக்கா | 07 | 06 | 01 | 00 | 12 | 2.290 |
அவுஸ்திரேலியா | 07 | 05 | 02 | 00 | 10 | 0.924 |
நியூசிலாந்து | 08 | 04 | 04 | 00 | 08 | 0.398 |
பாகிஸ்தான் | 08 | 04 | 04 | 00 | 08 | 0.036 |
ஆப்கானிஸ்தான் | 07 | 04 | 03 | 00 | 08 | -0.330 |
இலங்கை | 07 | 02 | 04 | 00 | 04 | -1.162 |
நெதர்லாந்து | 07 | 02 | 05 | 00 | 04 | -1.398 |
பங்களாதேஷ் | 07 | 01 | 06 | 00 | 02 | -1.446 |
இங்கிலாந்து | 07 | 01 | 06 | 00 | 02 | -1.504 |
அவுஸ்திரேலியா அணி: பட் கம்மின்ஸ்(தலைவர்) ,டேவிட் வோர்னர், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், ட்ரவிஸ் ஹெட், மார்கஸ் ஸ்ரொய்னிஸ் , கமரூன் கிரீன் , ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹெஸல்வூட், அடம் ஷம்பா
இங்கிலாந்து அணி : ஜோஸ் பட்லர் (தலைவர்), ஜொனி பாஸ்டோ, டாவிட் மலான், ஜோ ரூட், பென்ஸ் ஸ்ட்ரோக்ஸ், , லியாம் லிவிங்க்டன், மொயீன் அலி , டேவிட் வில்லி, ஆதில் ரஷீட், மார்க் வூட், கிறிஸ் வோக்ஸ்