இன்றும் 7 மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கொழும்பு மாவட்டத்தில் உள்ள சகல சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்திலும் (MOH) இன்றைய தினம் சைனோஃபாம் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. அதனை தொடர்ந்து கம்பஹா மாவட்டத்தில் உள்ள சகல சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகங்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இதேவேளை ராகமை, கம்பஹா, நீர்கொழும்பு, வத்துப்பிட்டிவல, கிரிபத்கொடை, மினுவங்கொடை மற்றும் மீரிகம ஆகிய பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளில் சிறுவர்களுக்கான பைஸர் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.